தாம்பரத்தில் இருந்து சிவகங்கை சென்ற போது காணாமல் போன இளைஞர்: காட்டூர் அருகே எலும்புக் கூடாக மீட்பு..!
The youth who went missing while traveling from Tambaram to Sivaganga was found dead in a skeleton near Kattur
சிவகங்கை மாவட்டம் பணத்துரை கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரனின் 02-வது மகன் பாண்டி 25. இவர் ஊரில் தினமும் குடித்துவிட்டு தகரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஊரில் மகன் இருந்தால் குடித்து அவனுடைய எதிர்காலம் வீணாக போய்விடும் என்று நினைத்த தந்தை வீரபத்திரன் பாண்டியை அழைத்து கொண்டு சென்னை தம்பரத்துக்கு வந்துள்ளார்.
இருவரும் தாம்பரம் ரங்கநாதபுரம் 05-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து மகனோடு சேர்ந்து நெய் விற்பனை செய்து வந்துள்ளனர். ஊரில் இருந்த போது பாண்டி வழக்கில் ஒன்றில் சிக்கியுள்ளார். இதனால் அவரது பைக்கை போலீசார் பரிமுதல் செய்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் 08-ஆம் தேதி சிவகங்கை திருவச்சட்டி காவல் நிலையத்தில் இருந்து பாண்டியை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர் பைக்கை வந்து எடுத்து செல்லுமாறு கூறிள்ளார்.
இதனால் பைக்கை எடுத்து வருவதாக கூறிவிட்டு பாண்டி ஊருக்கு சென்றுள்ளார். இரவு சிவகங்கைக்கு ரயில் ஏறிய அவர், சிவகங்கைக்கு செல்லவும் இல்லை, மீண்டும் தபாரத்துக்கும் திரும்பி வரவும் இல்லைனு. இதனால் மகனை பற்றி எந்த தகவலும் தெரியாததால் பதட்டம் அடைந்த தந்தை வீரபத்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாண்டியன் செல்போன் அவர் காணாமல் போனதில் இருந்தே ஸ்விட்ச்ஆஃ செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவரின் செல்போனை குறித்து தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இந்த சூழலில் தான் ஒரு மதத்திற்கு பிறகு பாண்டியன் செல்போனில் வேறு ஒருவர் சிம் கார்டு போடு பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
உடனே போலீசார் அந்த நம்பர் குறித்து விசாரணை செய்துள்ளனர். குறித்த மொபைல் டவர் லொகேஷன் மூலம் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். மணிகண்டன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது காட்டூர் ரயில் நிலையம் அருகே செல்போன் மற்றும் 300 ரூபாய் பணம் கிடைத்ததாகவும் செல்போன் டிஸ்பிலே உடைந்து இருந்ததால் அதை கடையில் கொடுத்து மாற்றி சிம் கார்டு போடு பயன்படுத்தி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் போலீசார் மணிகண்டனை அழைத்துக்கொண்டு செல்போன் கிடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்பகுதி முழுவதும் போலீசார் சோதனை செய்ததில், பாண்டி தாம்பரத்தில் இருந்து கிளம்பிய போது அணிந்திருந்த ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மனித எலும்பு துண்டுகள் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அணைத்து எலும்பு துண்டுகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்வின் முடிவில் அது பாண்டியுடைய எலும்பு துண்டுகள் என தெரிய வந்துள்ளது. பின்னர் குறித்த எலும்பு கூடுகளை அரசு மருத்துவமனையில் கொடுத்து, உருவம் போல் அமைத்து பாண்டியின் தந்தையிடம் இறுதி சடங்கு செய்ய போலீசார் கொடுத்துள்ளனர்.
பாண்டி தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் செல்லும் போது காட்டூர் ரயில் நிலையம் அருகே தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரா..? அல்லது யாரேனும் அவரை அடித்து கொன்று வீசி விட்டுசென்றுள்ளனரா என்ற கோணத்தில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். பாண்டியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே மர்மம் விலகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
The youth who went missing while traveling from Tambaram to Sivaganga was found dead in a skeleton near Kattur