பெண் சிசுக்களை 'கள்ளிப்பால்' கொடுத்து கொலை செய்யும் காலத்துக்கு சென்ற திருப்பத்தூர் மாவட்டம்: பெண் சிசுக்களை கண்டறிந்து கருக்கலைக்கும் கொடூரம்: ஸ்கேன் டெக்னீசியன் கைது..!
Scan technician arrested for allegedly involved in a fraud to identify and abort female fetuses in Tirupattur district
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் சிசு கொலைகள் அதிகமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கர்பிணி பெண்களுக்கு குறிவைத்து இந்த கருகலைப்பானது நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாயின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டு அறிந்து அந்த குழந்தைகளில் பெண் குழந்தை கருவுற்று இருந்தால் அதனை கருகலைக்கும் கொடூர மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 05 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த காகங்கரை பகுதியில் 08 கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் வரும் பொழுது ஆட்டோ பழுதாகி நின்றுள்ளது. அப்போது அங்கு விசாரணை செய்யும் போது கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டு அறிய வந்தோம் என்று தெருவித்துள்ளனர்.
அதன் பிறகு ஊர்பொதுமக்கள் குறித்த கர்ப்பிணிகளை பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இதற்கு முக்கிய மூளையாக செயல் பட்ட ப்ரோக்கர்களை 04 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து, மூளையாக செயல்பட்ட லேப் டெக்னீசியன் சுகுமார் என்பவர், ஸ்கேன் டெக்னீசியன் ஆகவும் பணியாற்றி வருகிறார். இவர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறிந்து அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யபட்டதும் அம்பலமாகியுள்ளது. சுகுமார் மீது ஏற்கனவே 03 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ள நிலையில், இவர் ஏற்கனவே, குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளார்.
அதன் பின்னர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? என கண்டறியும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கந்திலி போலீசார் சுகுமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Scan technician arrested for allegedly involved in a fraud to identify and abort female fetuses in Tirupattur district