மகாராஷ்டிராவில் துயரம்: மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 04 தொழிலாளர்கள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
04 people died due to gas leak at a pharmaceutical company in Maharashtra
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மருந்து நிறுவனம் ஒன்றில், திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவில் 04 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சொத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது குறித்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
பால்கர் மாவட்டத்தின் போயிசர் தாராபூர் எம்ஐடிசியில் உள்ள பிளாட் எண் எஃப் 13-இல் உள்ள மெட்லி பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காற்று கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த காற்று கசிவு காரணமாக நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஐந்து தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காயமடைந்த தொழிலாளர்கள் போய்சாரில் உள்ள ஷிண்டே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறித்த போயிசார் தாராபூர் தொழில்துறை எஸ்டேட்டில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. நிர்வாகம் இதைப் புறக்கணிப்பதால் தொழிலாளர்கள் உயிரிழக்கின்றதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
English Summary
04 people died due to gas leak at a pharmaceutical company in Maharashtra