இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீனா..என்ன செய்ய போகிறது அமெரிக்கா?
China has expressed support for India what is America going to do?
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்க்கிறோம் என்று சீன தூதர் சு பெய்கோங் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார் .அவர் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.மேலும் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை செய்துள்ளது.இந்தியா மீது 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் சு பெய்கோங் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது , ‘இந்திய மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியையும், இன்னும் அதை அதிகரிப்பேன் என்ற மிரட்டலையும் சீனா முற்றிலும் எதிர்க்கிறது’ எனக்கூறினார்.
இந்த வரி விதிப்பும், வர்த்தக போரும் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைப்புக்கு இடையூறாக இருப்பதாகவும் சு பெய்கோங் தெரிவித்தார். இந்த ஆதரவு இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் இந்தியாவுக்கு அளித்திருக்கும் சீனாவின் இந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
China has expressed support for India what is America going to do?