நீண்ட நேரம் போனை பயன்படுத்துபவரா நீங்கள்? இதை படியுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலக்கட்டத்தில் முக்கிய அங்கம் வகிப்பது ஸ்மார்ட்போன். காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை பார்த்து தான் பலரது பொழுதே விடிகிறது. அத்தகைய ஸ்மார்ட்போனை நாம் பாதுகாக்க வேண்டும் அல்லவா? நீண்ட நேரம் போனை பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அதே போல் போன்களில் முக்கிய அங்கமாக விளங்கும் பேட்டரியை பாதுகாக்க சில வழிகள் பற்றியும் பார்ப்போம்.

மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?

மொபைல் போனை தொடர்ந்து பலமணி நேரம் பயன்படுத்தினால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மொபைல் போனில் பேசும் போது ஒரே கையில் தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்துவதால், முழங்கையை மடக்கி பேச நேரிடுகிறது.

முழங்கையை நீண்ட நேரம் மடக்கி இருப்பதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு முழங்கையில் வலி ஏற்படும். அதோடு, முழங்கையை சுற்றியுள்ள தசைப் பகுதிகளிலும், வலி ஏற்படும்.

எனவே, தொடர்ந்து நீண்ட நேரம் மொபைல் போனில் பேசுபவர்கள், ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மொபைல் போனை மாற்றி மாற்றி பேசுவது நல்லது. ஹெட் செட் அணிந்தோ அல்லது ஸ்பீக்கரை பயன்படுத்தியோ மொபைல் போனில் பேசலாம்.

மொபைல் போன் பேட்டரியை பராமரிக்கும் முறைகள் :

மொபைல் போனில் இன்றியமையாத ஒன்று பேட்டரி தான். பேட்டரியை சூடு ஆகாமல் பார்த்து கொள்வது அவசியமான ஒன்று. அதற்கான சில வழிகள் :

மொபைல் போன்களுக்கு தரும் ஒரிஜினல் பேட்டரி மற்றும் ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.

தொடர்ந்து படம் அல்லது வீடியோ பார்க்கும் போது பேட்டரி சூடு ஆகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே மொபைல் போன் இருக்கக் கூடாது.

பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் செய்யக் கூடாது.

அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

ஈரம் மற்றும் அதிக சூடு இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தருபவை.

அதிக வெப்பம் உள்ள இடம் அல்லது தீ பிடிக்கக்கூடிய இடத்திற்கு அருகே மொபைல் போனை வைப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து தரக்கூடியது ஆகும்.

ஸ்மார்ட்போனின் ஓஎஸ் மற்றும் மற்ற ஆப்ஸ்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளவும். 

பழைய பேட்டரியை பயன்படுத்துவது பழைய மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும்.

English Summary

in your used phone long time


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal