நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் - எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் அண்மை காலமாக மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு வங்கி ஆவணங்கள், ஆதார், பான் எண் தகவல்களை கேட்டு பெறுகின்றனர். இந்த தகவல்களை கேட்டு வரும் செல்போன் எண் அழைப்புகள் பெரும்பாலும், மோசடி செய்பவர்கள் தான்.

எனவே, மோசடி மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் செல்போன் எண்களை முடக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் இணையதளத்தில், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை முடக்குவதற்கான கோரிக்கையை எழுப்புவதற்காக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதில், சைபர் குற்றத்தில் ஈடுபடும் செல்போண் எண்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்த்த பிறகு, அந்த செல்போன் எண் முடக்கப்படுகிறது. 

தமிழகத்தில், இதுவரை 20,197 செல்போன் எண்கள் முடக்குவதற்காக கோரிக்கையுடன் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 19,654 செல்போன் எண்கள்முடக்கப்பட்டுள்ளன.

இது நாட்டிலேயே நம் தமிழகத்தில்தான் அதிக அளவிலான செல்போன் எண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, முடக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyber Crime Mobile Number


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->