கொரோனவை செயலிழக்க வைத்து அழிக்கும்..! சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சாதனை!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸை அழிக்கும் புதிய கிருமி நாசினியை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகை ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் தொற்றானது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸினால் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிதல் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் வெளியில் பயணம் செய்யாமல் இருத்தல் போன்ற வழிமுறைகளை கடைபிடித்து வரும் அதே வேளையில், இந்த வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க  உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் தேசிய சுகாதார கருவிகள் வடிவமைப்பு மையம் நடத்திய ஆராய்ச்சியில் இந்த வைரசை அழித்து ஒழிக்கும் புதிய கிருமிநாசினி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கிருமி நாசினிகள் மேற்பரப்பை மட்டுமே சுத்தம் செய்யும் நிலையில் இந்த புதிய கிருமிநாசினி வைரஸின் முழு திறனையும் அழித்து அதன் ஊடுருவலை தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த கிருமி நாசினி நாம் கைகளில், பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்களுக்கும் பயன்படுத்தலாம் எனவும், இது தொடர்பாக அரசுக்கு தெரிவிக்க பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்பட இருப்பதாகக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai anna university invent new sanitizer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..




கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..




Seithipunal