கண் எரிச்சல் குறைய எளிய முறையில் இயற்கை வைத்தியம்.!! - Seithipunal
Seithipunal


கண்‌ எரிச்சல்‌ குறைய:

சிறிதளவு புளியங்கொட்டை தூளை பசும்பாலில்‌ கலந்து குடித்து வர கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

நெருஞ்சி இலை, அருகம்புல்‌, தேங்காய்‌ எண்ணெய்‌ மூன்றையும்‌ காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

முசுமுசுக்கை இலைச்‌ சாறோடு நல்லெண்ணெய்‌ சேர்த்து காய்ச்சி தேய்த்துக்‌ குளித்து வந்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

அகத்திக்‌ கீரை சாறு எருத்து அதனுடன்‌ பாசி பருப்பு சேர்த்து வேக வைத்து தேங்காய்‌ பால்‌ கலந்து குடித்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

பாதிரி மரத்தின்‌ வேரை காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்ரு தேன்‌ சேர்த்து சாப்பிட்டு வந்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

கோவை இலை கஷாயம்‌ குடித்து வர கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து சாறு பிழிந்து அதனுடன்‌ துவரம்‌ பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பிறகு தேங்காய்‌ பால்‌ சேர்த்து கலக்கி தினசரி சாப்பிட்டு வந்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

கொடிப்பசலைக்‌ கீரையை அரைத்து தலையில்‌ கட்டிக்கொண்டால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

நெருஞ்சில்‌ செடியைப்‌ பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன்‌ தண்ணீர்‌ சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

வில்வ இலைகளை சட்டியில்‌ போட்டு வதக்கி தூங்கச்‌ செல்வதற்கு முன்‌ இரண்டு கண்‌ இமைகளின்‌ மேலும்‌ வைத்துக்‌ கட்டி விட வேண்டும்‌. மறுநாள்‌ காலையில்‌ அவிழ்த்து விட வேண்டும்‌. இவ்வாறு கண்‌ எரிச்சல்‌ குறையும்‌ வரை செய்ய வேண்டும்‌.

கருங்காலி மர இலைகளை ரோஜா இதம்‌ சேர்த்து கண்களில்‌ ஒத்தடம்‌ கொழுக்க கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

கருங்காலி மர இலைகளை ரோஜா இதழ்‌ சேர்த்து கண்களில்‌ ஒத்தடம்‌ கொடுக்க கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

அதிமதுரம்‌, கருக்காய்‌, திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும்‌. அந்த பொடியை தேன்‌ கலந்த சுடுநீரில்‌ கலந்து சாப்பிட்டு வந்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

நாவற்பழத்தை ஒருநாள்‌ விட்டு ஒருநாள்‌ சாப்பிட்டு வந்தால்‌ கண்ணில்‌ ஏற்பரும்‌ எரிச்சல்‌ நீர்வடிதல்‌ ஆகிய நோய்கள்‌ குறையும்‌.

திருநீற்றுப்‌ பச்சிலை சாறை கண்ணின்‌ மேல்‌ தடவ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.

பொன்னாங்கண்ணி சாற்றில்‌ நல்லெண்ணெயும்‌ பாலும்‌ விட்ரு மிளகு போட்ரு சிவக்கக்‌ காய்ச்சி வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால்‌ கண்‌ எரிச்சல்‌ குறையும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

burning eyes issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal