குளிர்பதனத் (ஏர் கண்டிஷன்) தொழில்நுட்பத்தின் தந்தை பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி 1803ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் நகரில் பிறந்தார்.

சமுதாய சேவைகள் மற்றும் வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். 

மலேரியா, அறைகளை குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரது கட்டுரைகள் பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார்.

தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர் கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 1855ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIR CONDITIONOR BIRTHDAY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->