ஒரு செல்ஃபி... உங்கள் மருத்துவ ரிப்போர்ட் கைகளில் வந்தாச்சு... ஸ்மார்ட்போன் வரலாற்றில் ஒரு மைல் கல் சாதனை! - Seithipunal
Seithipunal


இன்று நாம் பயன்படுத்தி வரும் செல்போன் வெறும் கைபேசியாக மட்டுமல்லாமல் என்ன அன்றாட பணிகளில்  பாதிக்கும் மேற்பட்ட பணிகளை அதுவே ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. வங்கிக்கு பணப்பரிமாற்றம் செய்வதிலிருந்து உணவு ஆர்டர் செய்வது வரை  அனைத்துமே நம் கைபேசியில் வந்து விட்டன. தற்போது இதற்கு ஒரு படி மேலே சென்று நம் உடல் ஆரோக்கியத்தை  பாதுகாக்கும் சில பரிசோதனைகளையும் செல்போன்களின் மூலம் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

முதல் செல்போன் குழுவை வழி நடத்திய மார்ட்டின் கூப்பர்  செல்போன்கள் நம் உடலின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் முக்கிய கருவியாக மாறும் என கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். அதனை நிரூபிப்பது போல ரத்தம் உறைதல் மற்றும் உடலில் நிகழும் சில முக்கியமான மாற்றங்களை நமது செல்போன் மூலமே அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தற்போது நிரூபித்துள்ளனர்.


கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வாஷிங்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் iphone மூலம் ரத்தத்தின் உறையும் திறனை பரிசோதித்தனர். இதற்கு லிபார் என்ற கருவியை பயன்படுத்தி ரத்தம் உறைதல் திறனை கண்டறிந்தனர். இது ரத்தம் உறையும் திறனை 3டி பரிணாமத்தில்  வறைபடமாக கொடுக்கிறது அதிலிருந்து  நம் ரத்தத்தின் உரையும் திறன் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய இயலும்.

சமீப கால ஆராய்ச்சிகளின் மூலம்  செல்போன் கேமராக்கள் மற்றும் அதிர்வு மோட்டார்களை பயன்படுத்தி ரத்தத்தின் உறையும் திறனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்னும் சில ஆய்வாளர்கள் ரத்த அழுத்தம் போன்ற இதயத்தை பாதிக்கும் நோய்களை  செல்போன் கேமராக்களின் மூலம் எவ்வாறு கண்டறிவது என ஆராய்ந்து வருகின்றனர். இதுபோன்று மனித குலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல ஆய்வுகள் செல்போன்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருவது  தொழில்நுட்பத்தின் திறனை காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A milestone achievement in the history of smartphones that the medical world has come to grips with


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->