சிவகங்கை || மஞ்சுவிரட்டில் தூக்கி வீசிய காளை - பரிதாபனமாக பறிபோன வாலிபர் உயிர்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி அருகே வ.சூரக்குடி பகுதியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சு வீட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி, வடமாடு மஞ்சுவிரட்டு நடந்துள்ளது. 

இந்த மஞ்சுவிரட்டில் பதினைந்து காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த மஞ்சு வீட்டில் 4-வது சுற்றில் ஒரு காளை களம் இறக்கப்பட்டது. அந்த காளையை அடக்க சேலத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் குழுவினர் களமிறங்கினர்.

ஆனால், இந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்தது. இந்த நிலையில், அந்த குழுவை சேர்ந்த சேலம் மாவட்டம் வரங்காம்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காளையை அடக்க முயன்றபோது, அவரை காளை முட்டி தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த வீரர் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth died jallikattu in sivakangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->