ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்., போக்சோவில் இளைஞர் கைது..!! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்படுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் பழகி வந்தனர். இதனை அடுத்து திடீரென சிறுமி காணாமல் சென்றுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து, சிறுமியை தேடி வந்த காவல்துறையினருக்கு அவர் சதீஷூடன் வெளியூரில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை மீட்டு பல்லடம் கொண்டு வந்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆசை வார்த்தை கூறி சதீஷ் சிறுமியை கடத்தி சென்றதும் அவரை திருமணம் செய்து அவரை பாலியல்துன்புறுத்தல் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for kidnapping girl Near Thiruppr


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal