திருமணம் செய்து கொள்வதாக காதலித்து ஏமாற்றிய இளைஞர் சிறையில் அடைப்பு!
young woman cheated men arrested
ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைத்தனர்:
அரியலூர்: ஆண்டிமடம் கிராமம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 26). அதே பகுதில் உள்ள தியாகராஜ நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இருவரும் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் ஒன்றாக படித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருச்சியில் வெவ்வேறு கல்லூரிகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் படித்து விட்டு, வேலை தேடி சென்னை சென்றனர்.
அங்கு இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து, ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன்-மனைவி போன்று குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாலமுருகன் சம்மதத்தோடு திருமணம் செய்து வைக்க வீட்டில் உள்ளவர்கள் வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர்.
இது குறித்து தமிழ் செல்வியிடம், நான் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன், அதே போல் நீயும் வேறு பையனை பார்த்து திருமணம் செய்து கொள் என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததில் தலைமை காவலர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஏமாற்றிய பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
English Summary
young woman cheated men arrested