சென்னை || திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், தன்னுடன் வேலைபார்க்கும் உதயா என்பவரை புதன்கிழமை  திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் வெள்ளிகிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருவள்ளூர் ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Girl Found Dead In Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->