சீரழியும் இளம்தலைமுறை... கல்பாக்கம் அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...! - கல்லூரி மாணவர் சிக்கியது எப்படி...?
young generation being corrupted Schoolgirl gang raped near Kalpakkam How did college student get caught
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகாலை நேரங்களில் வெளிப்புற பகுதிக்கு செல்வது வழக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையை கவனித்து வந்த காரைத்திட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20), அவரது நண்பர் அஜய் (27) ஆகியோர், சம்பவத்தன்று அதிகாலை சிறுமியை பின்தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது சிறுமியை மிரட்டி அருகிலிருந்த இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிறுமி தப்பிக்க முயன்றபோது, அவரை தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிக நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தந்தை பல இடங்களில் தேடத் தொடங்கினார். பின்னர் அருகிலிருந்த ஒரு வீட்டின் மாடிப்பகுதியில் சிறுமி மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
தற்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் தந்தை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், காரைத்திட்டு பகுதியில் பதுங்கியிருந்த மகேஸ்வரன் மற்றும் அஜயை காவலர்கள் விரைந்து கைது செய்தனர். இருவர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும், அஜய் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young generation being corrupted Schoolgirl gang raped near Kalpakkam How did college student get caught