மேடையை விட்டு கீழே இறங்கி வந்த முதல்வர் விஜய்! நிறைமாத கர்ப்பிணிக்கு நேரில் சென்று பணி ஆணை வழங்கிய நெகிழ்ச்சித் தருணம்... அரங்கமே அதிரவைத்த கைதட்டல்...!
Chief Minister Vijay came down from stage emotional moment when he personally visited pregnant woman and gave her work order applause that shook entire hall
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அரசுப் பணிக்குத் தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

புதிய பொறுப்பை அர்ப்பணிப்புடனும் மக்கள் நல நோக்கத்துடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில் 383 பேர் உதவிப் பொறியாளர்களாகவும், 18 பேர் உதவி கணக்கு அலுவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு தங்களது நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு மின்வாரியத்தின் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், நடப்பு ஆண்டிற்குள் 15 ஆயிரம் பேரை புதிதாக பணியில் அமர்த்தும் முக்கிய அறிவிப்புக்கும் முதல்-அமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார்.இந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நெகிழ்ச்சியான தருணம் ஒன்றும் அரங்கேறியது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் மேடைக்கு வர இயலாத நிலையை கவனித்த முதல்-அமைச்சர் விஜய், உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே நேரில் சென்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
முதல்-அமைச்சரின் இந்த மனிதநேய செயல் அரங்கில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.
English Summary
Chief Minister Vijay came down from stage emotional moment when he personally visited pregnant woman and gave her work order applause that shook entire hall