பூட்டிய கதவு... உள்ளே கிடந்த சடலம்...! சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு...அழுகிய மூதாட்டியின் மரண பின்னணி குறித்து துப்பறியும் தனிப்படை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் தெற்குத் தெருவில் மூதாட்டி ஒருவர் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் அழுகிய உடலாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சேர்மதுரையின் மனைவி ஜெயலட்சுமி (67), இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தினசரி மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து திடீரென கடும் துர்நாற்றம் வீசியது அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அருகில் வசித்த பெண் ஒருவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான காட்சி காத்திருந்தது.

ஜெயலட்சுமி வீட்டுக்குள்ளேயே அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சாத்தான்குளம் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

பின்னர் ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், ஜெயலட்சுமி உயிரிழந்து சுமார் 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அவரது மரணம் இயல்பானதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

locked door dead body inside Great excitement Satankulam area special team investigating background death decaying old woman


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->