TNPSC தேர்வர்களுக்கு நேரில் பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்...! - தலைமைச் செயலகத்தில் நெகிழ்ச்சித் தருணம்...!
Chief Minister Vijay personally issued appointment orders TNPSC candidates Moment resilience Secretariat
சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்குத் தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், புதிய பொறுப்பை அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில் 383 பேர் உதவிப் பொறியாளர்களாகவும், 18 பேர் உதவி கணக்கு அலுவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு தங்களது பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.இந்த நியமனங்கள் மூலம் பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், நடப்பு ஆண்டுக்குள் தமிழ்நாடு மின்வாரியத்தில் 15 ஆயிரம் பேரை புதிதாக பணியில் அமர்த்தும் முக்கிய அறிவிப்புக்கும் முதல்-அமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார்.
இந்த நடவடிக்கை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அரசுத் துறைகளின் நிர்வாக திறனையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Minister Vijay personally issued appointment orders TNPSC candidates Moment resilience Secretariat