நெருக்கடிகளால் எங்களை முடக்க முடியாது'...! - அன்பானந்தன் கைது முயற்சிக்கு உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை...!
Crises cannot paralyze us Udhayanidhi Stalin public warning against attempt arrest Anbanandan
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ஆளும் அரசின் செயல்பாடுகள் மற்றும் கழக இளைஞர்கள் மீது நடைபெறுவதாக கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவலர்கள் கைது செய்ய முயன்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற Gen Z கூட்டத்தில் பேசிய தம்பி கனி மீது த.வெ.க.வினர் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தம்பி கனியை மிரட்டி அவசரமாக வெளியேறச் செய்துள்ளனர்.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையோ, அரசையோ விமர்சித்து பேசினால் உடனடியாக காவலர்களை அனுப்புவது; ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் என்றால் அமைதியாக வேடிக்கை பார்ப்பது இதுதானா நீங்கள் சொன்ன மாற்றம்? நிர்வாக திறனற்ற Sofa Model அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் சிதறி நொறுங்கி வருகிறது.
அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆட்சியாளர்கள் தற்போது அடக்குமுறை அரசியலை கையில் எடுத்துள்ளனர்.கழக இளைஞர்களை காவலர்களை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தெளிவாக எச்சரிக்கிறேன்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Crises cannot paralyze us Udhayanidhi Stalin public warning against attempt arrest Anbanandan