சாதி ரீதியில் திட்டிய "திமுக நிர்வாகியை கண்டித்து" பெண்கள் சாலை மறியல்!!
Women strike on road DMK cadre insulted caste
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்களை அவதூறாக பேசியதோடு சாதி பெயர் சொல்லி திட்டிய திமுக பிரமுகர் சாமுவை கண்டித்து இறைவனுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சியை சேர்ந்த தேன்மொழி வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சாமு தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே உள்ள ஊராட்சி மன்றத்திற்கு நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி தலைமையிலான ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை தனது நிலத்திற்கு அருகே அப்புறப்படுத்தப்பட்ட இடத்தை பார்த்த பிறகு மது போதையில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழியின் சொந்த ஊரான பழைய அத்திக்குப்பம் கிராமத்திற்கு சென்ற திமுக நிர்வாகி சாமு ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு சாதிப்பெயர் சொல்லி திட்டியுள்ளார்.

மேலும் இதனை தட்டி கேட்ட பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு சாதிப் பெயர் சொல்லி கீழ்த்தனமாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திமுக நிர்வாகி சாமுவை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த பொம்மிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, மற்றும் அவருடைய கணவர், திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் கிராமப் பெண்களிடம் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.ஆனால் திமுக நிர்வாகி சாமு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திமுக நிர்வாகி சாமு பொம்மிக்குப்பம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைத்து பெண்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Women strike on road DMK cadre insulted caste