ராம் பட பாணியில், தாயின் சடலத்துடன் வாழ்ந்த இளைஞர்.! திகில் தரும் உண்மை சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் இருக்கும் பாளையங்கோட்டை அருகே விமலா(70) என்பவருக்கு மனநலம் குன்றிய அகிலன் என்ற மகன் இருக்கின்றார். இவர்களுக்கு நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் தங்களுடைய குடும்ப செலவுகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், விமலாவின் வீட்டில் மார்ட்டின் என்பவர் குடியிருந்து வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

வீட்டை காலி செய்து நீண்ட நாட்களாகியும் முன்பணம் திருப்பி தராததால் மார்ட்டினின் தந்தை விமலாவின் வீட்டிற்கு சென்று முன் பணத்தை பெற்று வர நினைத்து அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்த அகிலன் அம்மாவை பார்க்க முடியாது, அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டிலிருந்து ஒரு மாதிரியான நாற்றம் வீசிக் இருக்கின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவலர்களிடம் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்க்க தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார் விமலா.

மனநலம் சரியில்லாத அகிலன் அம்மாவை கொலை செய்தாரா? அல்லது வேறு எவரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராம் படத்தில் வருவதுபோல தாயின் சடலத்தை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு இரண்டு நாட்களாக மகன் இருந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women dead in nellai


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal