பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா போராட்டம்: காரணம் என்ன?
women councilor dharna protest
சேலம், தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம், கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற போது நகராட்சி மன்ற தலைவர் தலைமை ஏற்றார். ஆணையாளர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர், தி.மு.க உறுப்பினர் ஆகியோர் தங்களின் வார்டுகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக தெரிவித்தனர்.
அதுபோல் 4-வது வார்டு உறுப்பினர் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆணையர் ஆணையரை ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார்.
மேலும் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்து மன்ற அரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரிடம் அங்கிருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உங்களது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றப்படும் என தலைவர் உறுதி அளித்தார்.
அதன் பின்னர் வார்டு உறுப்பினர் அவரது இருக்கையில் அமர்த்தர். இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
women councilor dharna protest