அரியலூர் || பெற்றோர் கண் முன்னே நடந்த கொடுமை.. குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர்  அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த இளைஞர் ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பதினேழு வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide attempt for harassment in ariyalur


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->