சச்சின் விக்கெட்டை வீழ்த்த பந்தயம்; 'மூத்த வீரர்களுக்கு தெரியாமல் ஊசி, மாத்திரைகளை எடுத்தோம்'; சோயப் அக்தர் உடைத்த ரகசியம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இவர் 1998-99 காலப்பகுதியில், இந்திய சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது தொடர்பாக மனம் திறந்துள்ளார்.

அதாவது சோயப் அக்தரும், சக வீரரான சக்லைன் முஷ்டாக்கும் செய்துக் கொண்ட ரகசிய பந்தயம் குறித்து தற்போது பேசியுள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியின், இந்திய சுற்றுப்பயணத்தின் போது சென்னை மற்றும் டெல்லி போட்டிகளில் சக்லைன் முஷ்டாக் ஏற்கனவே சச்சின் விக்கெட்டினை வீழ்த்தி இருப்பார்.

அந்த விக்கெட்டை நானே எடுப்பேன் என சக்லைன் கூறியதாகவும், அவரிடம், "இல்லை, இந்த முறை அது என்னுடைய விக்கெட், நான் தான் அவரை வீழ்த்துவேன்" என பந்தயம் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்தச் சமயத்தில் அவர்கள் இருவருமே கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பது நிர்வாகத்திற்கு தெரிந்து விட்டால், அணியில் இருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தில், மூத்த வீரர்களுக்குத் தெரியாமல் இருவரும் ரகசியமாக ஊசிகள் மற்றும் மாத்திரைகளை (வலி நிவாரணிகள்) எடுத்துக்கொண்டு விளையாடியாத ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

கடந்த 1999 கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில், சச்சினை முதல் பந்திலேயே க்ளீன் போல்டு ஆக்கிய தன் மூலம் நான் சவாலில் வெற்றி பெற்றேன் என்று அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதே போட்டியில் சச்சின் அக்தர் மீது மோதியதால் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆனார். இதனால்,  ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சச்சின் நேரடியாக வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shoaib Akhtar opens up about taking injections and pills without the knowledge of senior players to take down Sachin Tendulkar


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->