மூட்டை மூட்டையாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் மீதான விசாரணைக்குழுவில் மாற்றம்; மக்களவை சபாநாயகர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது எறிந்த நிலையில்,  மூட்டை மூட்டையாகவும், கட்டுக்கட்டாகவும் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி மக்களவை சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியது.

இதன் அடிப்படையில் 03 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைக்கப்பட்டது.  இதில், உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் விசாரணை மேற்கொள்வார்கள் என சபாநாயகர் தெரிவித்தார்

இந்த நிலையில் விசாரணை குழுவை தற்போது சபாநாயகர் ஓம்.பிர்லா மாற்றியமைத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் அவருக்கு பதிலாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரும் விசாரணை குழுவில் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Speaker of the House of Representatives announces changes in the investigation committee against Judge Yashwant


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->