சச்சின் மகன் அர்ஜுன் - சானியா சந்தோக் திருமணம்: அம்பானி இல்லத்தில் தொடங்கிய கோலாகலமான கொண்டாட்டங்கள்!
Arjun Tendulkar Sania Santhok PreWedding Festivities Kick Off in Jamnagar
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்டகாலத் தோழியும் தொழிலதிபருமான சானியா சந்தோக்கை வரும் மார்ச் 5-ஆம் தேதி கரம் பிடிக்கிறார். இந்தத் திருமணத்திற்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுக்குச் சச்சின் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜாம்நகரில் ஜொலிக்கும் வைபவம்:
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் எஸ்டேட்டில் கோலாகலமாகத் தொடங்கின. அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெற்ற அதே புனிதமான இடத்தில், கணேஷ் பூஜையுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
நீதா அம்பானியின் நெகிழ்ச்சி உரை:
மணமக்களை வரவேற்றுப் பேசிய நீதா அம்பானி, சச்சின் குடும்பத்தினரைத் தங்களது சொந்தக் குடும்பமாகவே கருதுவதாக உருக்கமாகத் தெரிவித்தார்:
அர்ஜுன் குறித்து: "எங்கள் பள்ளியில் ஒரு சிறுவனாக அர்ஜுனைப் பார்த்தேன். இன்று அவர் ஒரு அழகான பயணத்தைத் தொடங்குவதைப் பார்க்கும்போது என் இதயம் நிறைகிறது."
சானியா குறித்து: "சானியாவிடம் இருக்கும் நேர்மறையான ஆற்றல் (Positive Energy) வியக்க வைக்கிறது. இருவரும் இணைந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது."
சச்சினின் நெகிழ்ச்சி:
தங்கள் குடும்ப நிகழ்வை இவ்வளவு சிறப்பாக முன்னின்று நடத்திய அம்பானி குடும்பத்திற்குச் சச்சின் டெண்டுல்கர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
English Summary
Arjun Tendulkar Sania Santhok PreWedding Festivities Kick Off in Jamnagar