"தஞ்சாவூர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை!"
Local Holiday for Thanjavur District on March 2nd for Masi Magam
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, வரும் மார்ச் 2-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடு செய்யும் வேலை நாள்: இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களும் முழுப் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கவனிக்க வேண்டியவை:
இந்த விடுமுறையானது பள்ளி மற்றும் கல்லூரி பொதுத்தேர்வுகள் நடக்கும் பட்சத்தில், அந்தத் தேர்வுகளுக்குப் பொருந்தாது. வங்கிப் பணிகளைப் பொறுத்தவரை, அரசு கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் அவசரத் தேவைகளுக்காகச் செயல்படும்.
கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மாசி மகத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் என்பதால், பக்தர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Local Holiday for Thanjavur District on March 2nd for Masi Magam