சூப்பர் 8 சுற்று; அர்ஷ்தீப் சிங் அசத்தல்; அபிஷேக் சர்மா, பாண்டியாவின் அதிரடி; ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 08 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குரூப் 01 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரஸா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 04 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் 24 ரன்கள், அபிஷேக் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக, இஷான் கிஷன் 38, சூர்யகுமார் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில்  ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் அடித்து அரை சதம் கடந்தார். திலக் 44 ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியில், மொத்தமாக 17 சிக்சர்களை விளாசிய இந்தியும் அணி, 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 06 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்தார். ராஸா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. .இந்தியா அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 03 விக்கெட் வீழ்த்தினார். வருண், அக்சர், தூபே தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India beat Zimbabwe by 72 runs in Super 08 round


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->