தோழர் நல்லகண்ணுவின் உடல் மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டத..! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1:55 மணிக்கு மரணம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து இன்று, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது உடலை முறைப்படி சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், மருத்துவ மாணவர்களின் கல்விக்காக அவரது குடும்பத்தினர் ஒப்படைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Comrade Nallakannus body was donated to Chennai Medical College for the education of students


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->