ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய உலக பொருளாதார மன்றத் தலைவர் ராஜினாமா; இடைக்கால தலைவர் நியமனம்..!
World Economic Forum President Resigns Over Jeffrey Epstein Files
அமெரிக்க தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டில் கடந்த 2019 ஜூலை மாதம் அவர் கைது செய்யட்டு நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்ற உத்தரவின்படி 'ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்' என லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், உலக பொருளாதார மன்ற தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்துகொண்டதாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பதவியை போர்கே ராஜினா செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் தலைவர் பதவி வகித்து வந்த இவர், தனது பதவி விலகல் குறித்து பேசுகையில், 'உலகப் பொருளாதார மன்றம் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காகவே நான் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த எட்டரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் பணியாற்றியதில் எனக்கு மிகவும் திருப்தி' என்று குறிப்பிட்டுள்ளார்.
போர்கே பதவி விலகியதைத் தொடர்ந்து, அலோயிஸ் ஸ்விங்கி உலகப் பொருளாதார மன்றத் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
English Summary
World Economic Forum President Resigns Over Jeffrey Epstein Files