ராமநாதபுரம் || கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதி அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா என்பவரும் ஆதியாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது காதலித்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வடபழனியில் உள்ள அழகிரி நகர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மகேந்திரனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சரண்யா, சென்னையில் இருந்து ஆதியாகுடிக்கு சென்று மகேந்திரனிடம் வேறு திருமணம் செய்யக்கூடாது என்றுக் கூறி கெஞ்சி உள்ளார்.

ஆனால், மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவை தாக்கி, வீட்டை விட்டு வெளியில் தள்ளியுள்ளனர். இதையடுத்து, சரண்யா கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சரண்யா, "எனக்கும் மகேந்திரனுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, பலமுறை கர்ப்பம் அடைந்தேன். ஆனால், அதனை மகேந்திரன் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கலைத்தார்.

இந்த நிலையில், தனது கணவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கும் தகவல் அறிந்து திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman protest front of husband house in ramanathapuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->