திருமணம் செய்துகொள்ளாததால் பெண் காவலர் தற்கொலை - விசாரணையில் சிக்கிய போலீசார்.!! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்துகொள்ளாததால் பெண் காவலர் தற்கொலை - விசாரணையில் சிக்கிய போலீசார்.!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. காவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த 22-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுகந்தி திருப்பூரில் பணியாற்றிய போது திருமணமான காவலர் விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

மேலும், விஷ்ணு தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு சுகந்தியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததும், ஆனால் விஷ்ணு திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சுகந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே காவலர் விஷ்ணு போலீஸார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் உயிரிழந்த காவலர் சுகந்தியின் சகோதரர், தனது சகோதரியின் தற்கொலைக்கு காரணமான காவலர் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்துடன் சென்று டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman police sucide in chennai koyambed


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->