கோவையில் அதிர்ச்சி சம்பவம்: தாயின் கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கள்ளக்காதலனை கொலை செய்த பெண் கைது..!
Woman killed her adulterer along with her mother adulterer arrested in Coimbatore
துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு மது மற்றும் இறைச்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்துள்ள கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியை 69 வயதான தியாகராஜன். இவர் கோவை வந்து பீளமேடு காந்திமா நகரில் வசித்த போது கோமதி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் எற்பட்டது.
கோமதிக்கு நிலா மற்றும் சாரதா என்ற 02 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சாரதாவிடம் கள்ளக்காதல் குறித்து தகராறில் ஈடுபட்ட அவரது கணவர் குணவேலை கடந்த 2016-ஆம் ஆண்டு தியாகராஜன் கொலை செய்து சிறைக்கு சென்றவர், பிறகு அவர் ஜாமீனில் வந்துள்ளார்.
இந்நிலையில், சாரதா துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 47 வயதுடைய டிராவல்ஸ் அதிபர் சிகாமணி என்பவருடன் சாரதாவிற்கு மீண்டும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சாரதாவிற்கும், சிகாமணிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், சாரதா கோவை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், சாரதாவை சமாதானம் செய்ய சிகாமணி கடந்த 21-ஆம் தேதி கோவை வந்துள்ளார். அப்போது அவரை, சாரதா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அந்த நிலையில் கோமதியின் கள்ளக்காதலன் தியாகராஜன், நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதி பாண்டியன் கூட்டாளி புதியவன் என்பவரை கோவைக்கு வரவழைத்துள்ளார். அதன் பின் கடந்த 22-ஆம் தேதி இரவு மது மற்றும் இறைச்சியில் 30- க்கும் மேற்பட்ட தூக்க மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கலந்து கொடுத்து சிகாமணியை கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் தியாகராஜன், சாரதா, புதியவன் ஆகிய 03 பேரும் சிகாமணி உடலை காரில் எடுத்து சென்று கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்திக்கு கொண்டு சென்று வீசியுள்ளனர். பின்னர் சாரதா விமானம் மூலம் துபாய் தப்பி சென்ற நிலையில், மற்ற இருவரும் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சிகாமணியின் மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தியாகராஜன் (69), புதியவன் (48), தியாகராஜன் கள்ளக்காதலி கோமதி (53), இவரது மகள்கள் நிலா (33), சாரதா (35) மற்றும் அவர்களின் உறவினர் ஸ்வாதி (26) ஆகியோர் சேர்ந்து சிகாமணியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சாரதாவை தவிர 05 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்து துபாய் தப்பி ஓடிய சாரதாவுக்கு அங்கிருந்த சிகாமணியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆபத்து என பயந்து அவர் கோவை திரும்பியுள்ளார். அதன் பின் அவர் தலைமறைவானார். இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சாரதாவை நள்ளிரவில் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Woman killed her adulterer along with her mother adulterer arrested in Coimbatore