திருப்பூர் || தங்கைக்கு வீட்டை விற்ற கணவன்.! உறவினர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரச் செயல்.!
wife attack husband with relatives in tirupur for home sale to sister
திருப்பூர் || தங்கைக்கு வீட்டை விற்ற கணவன்.! உறவினர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரச் செயல்.!
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ். இவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தங்கமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முருகேஷின் மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் மருத்துவ செலவிற்காக முருகேஷ் கடன் வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து முருகேஷ் வாங்கிய கடனை அடைக்க தன்னுடைய வீட்டை தனது தங்கைக்கே விற்பனை செய்துள்ளார்.

இதையறிந்த தங்கமணி தன்னுடைய உறவினர்களிடம் முருகேஷ் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டதாக கூறி அவர்களுடன் சேர்ந்து கொண்டு முருகேஷை அடித்து துரத்தியுள்ளார்.
இதன் காரணமாக முருகேஷ் தான் பணியாற்றும் இடத்திலேயே தங்கி வந்தார். இதுமட்டுமமல்லாமல், தங்கமணி போலீசாரின் உதவியுடன் தங்கைக்கு விற்ற முருகேஷ் வீட்டில் அத்துமீறி வாழ்ந்து வந்துள்ளார். இது தொடர்பாக முருகேஷ் மற்றும் அவரது தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், தங்கமணி தங்களது வீட்டை ஆக்கிரமித்து இருப்பதாகவும் திருமண ஆனதை மறைத்து விவகாரத்து ஆனதாக கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
wife attack husband with relatives in tirupur for home sale to sister