உஷார் மக்களே...! மருத்துவக் கல்லூரி ‘சீட்’ தருவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ரூ.5.8 லட்சம் மோசடி செய்ததன் பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


சென்னையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக நம்பிக்கை அளித்து, பெண்ணிடம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்று ஏமாற்றிய இளைஞரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்த சுகன்யா லட்சுமி (37), தனது மகனுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், நண்பர் மூலம் அறிமுகமான கரையான்சாவடியைச் சேர்ந்த சக்தி (27) என்பவரை அணுகியுள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதியாக கிடைக்கச் செய்து தருவதாக உறுதியளித்த சக்தி, அதற்காக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கூறியபடி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தராமல், பெற்றுக் கொண்ட பணத்தையும் திருப்பி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகன்யா லட்சுமி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து சக்தியை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What background behind fraud 5point8 lakhs by falsely promising provide medical college seats


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->