உஷார்.. 3 டிகிரி வரை உயரப்போகும் வெயில்...! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா...? - வானிலை ஆய்வு மையம்
temperature rise up 3 degrees Do you know where it rain today Meteorological Department
தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதால், இன்று (12-07-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர தமிழகப் பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.வருகிற 13-07-2026 முதல் 16-07-2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.
ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-07-2026 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-07-2026 முதல் 15-07-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் வெப்பம் சற்றே அதிகரிக்கக்கூடும். மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
temperature rise up 3 degrees Do you know where it rain today Meteorological Department