த.வெ.க. விவகாரம்...! தொடரும் சஸ்பெண்ட் ஆக்சன்... பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறையில் திரையிட்டு காண்பித்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரண்டாவது அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் எல்.இ.டி. திரை மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, கல்வி நிலையத்தை அரசியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் அதே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சண்முகவேல் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk Issue Suspension action continues School Education Department drastic action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->