டிக்கெட் புக்கிங் இனி ‘மின்னல்’ வேகத்தில்...! - புதிய பொலிவுடன் களம் இறங்கும் IRCTC இணையதளம்...! - Seithipunal
Seithipunal


ரெயில் பயணச்சீட்டு முன்பதிவில் நீண்ட காலமாக பயணிகளை வாட்டி வந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையவழி முன்பதிவு தளம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, விரைவில் புதிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.தற்போது ரெயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர் இணையவழி சேவையையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக அவசர முன்பதிவு நேரங்களில் சேவை மந்தமாகுதல், அடையாள உறுதிப்படுத்தும் குறியீடுகளை பதிவு செய்வதில் ஏற்படும் சிரமம், திடீர் தொழில்நுட்ப தடங்கல்கள் போன்ற காரணங்களால் பலரின் முன்பதிவு முயற்சிகள் தோல்வியடைந்து வந்தன. இதனால் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி, ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பயணிகளின் சிரமங்களை முழுமையாக குறைத்து, வேகமான மற்றும் தடையற்ற முன்பதிவு அனுபவத்தை வழங்கும் நோக்கில் இணையவழி முன்பதிவு தளம் புதிய தோற்றத்துடனும் நவீன வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது,"பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இணையவழி முன்பதிவு தளத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான சோதனை நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

முன்பதிவு நடைமுறையை மிக எளிமையாகவும் விரைவாகவும் மாற்றும் வகையில் நான்கு முக்கிய மேம்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.முன்பதிவின்போது தேவையில்லாத அடையாள உறுதிப்படுத்தும் குறியீடுகள் நீக்கப்படுகின்றன. இடையூறு ஏற்படுத்தும் தேவையற்ற திரை அறிவிப்புகள் அகற்றப்படுகின்றன.

பார்வையை சிதறடிக்கும் ஒளிரும் காட்சியமைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வகுப்பு பயணச்சீட்டுகளிலும் இருக்கை நிலவரத்தை ஒரே திரையில் எளிதாக அறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய மாற்றங்களால் பயணச்சீட்டு முன்பதிவு வேகமாகவும், எளிமையாகவும், சிரமமின்றியும் நிறைவேறும் என்பதால், ரெயில் பயணிகளுக்கு இது மிகுந்த பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ticket booking now lightning speed IRCTC website launches new look


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->