மேல் வயிற்று வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவநாகரீக காலகட்டத்தில் வாழ்ந்து வந்துகொண்டு இருக்கும் நாம்., நமது உடலை பாதுகாப்பதில் பெரும் குற்றம் புரிந்து வருகிறோம். சரியான நேரத்தில் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை., உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை. மாறி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு நன்மையை வழங்கும் உணவுகளை விட்டுவிட்டு., கெடுதலை உண்டாக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். 

இதனால் நமது உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு பல விதமான நோய்களுக்கு சிறுவயதில் இருந்து ஆளாகி., அதனால் ஏற்படும் விளைவுகளால் அவதியடைந்து வருகிறோம். அந்த வகையில்., இன்று நாம் பார்க்கப்போடும் பிரச்சனையானது மேல் வயிற்று வலி பிரச்சனை. இன்றுள்ள பலருக்கு ஏற்படும் பெரும் பிரச்சனையில் இதுவும் ஒன்றாக உள்ளது. 

நமது வயிற்றில் உள்ள மேல் வயிற்றில் வலி ஏற்படும் பட்சத்தில் உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் உள்ள பிரச்னையின் காரணமாக மேல் வயிறு வலிக்கலாம். இதுமட்டுமல்லாது மேலும் பல கரணங்கள் உள்ள நிலையில்., சில நேரத்தில் வரும் வயிற்று வலியானது தீவிர பிரச்சனையுடன் உள்ள அறிகுறிகளின் காரணமாக வயிற்று வலியானது ஏற்படும். 

பித்தப்பை மற்றும் கல்லீரல் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மேல் வயிற்று வலியானது ஏற்படலாம். நமது பித்தப்பையில் கற்கள்., கல்லீரல் சுருக்கம் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளின் காரணமாக கூட வயிற்று மேல் வலியானது ஏற்படும். மேல் வயிற்றில் ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகள் தாக்கத்தால் பெரும்பாலும் ஏற்படும். 

வயிறு வலியானது வயிற்று பகுதி மற்றும் உணவு குழாயில் இருந்து ஏற்படும் பட்சத்தில் நெஞ்சு எரிச்சல்., இரைப்பை குடல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். இரைப்பை அலர்ஜி பிரச்சனையானது இரைப்பையின் சுவரில் இருக்கும் பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இதன் காரணமாக இரைப்பை புண்., அலர்ஜி மற்றும் அல்சர் போன்றவை மூலமாக வயிற்று வலியானது ஏற்படும். 

இயற்கையான சில எளிய முறைகள் மூலமாக இந்த பிரச்சனையை குணப்படுத்த இயலும். அந்த வகையில் மேல் வயிற்று பிரச்சனைகளை சரி செய்வதற்கு உள்ள இயற்கையான வழிமுறைகள் குறித்து இனி காண்போம். இயற்கையான முறையில் குணப்படுத்துவதற்கு அதிகளவில் நீரை அருந்துதல்., பழச்சாறுகளை அருந்துதல்., சுடுநீரால் வயிற்றல் ஒத்தனம் வழங்குதல்., ஆப்பிள் சீடர் வினிகர்., விளக்கெண்ணெய் ஒத்தனம்., இஞ்சி., மஞ்சள்., அதிமதுரம் மற்றும் சோம்பு போன்றவை நமது உடல் நலத்தை பாதுகாக்கிறது. இதன் மூலமாக வயிற்று வலி பிரச்சனையும் சரி செய்யப்படுகிறது. 

மேல் வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும்., அதனை தவிர்ப்பதற்கு எளிய இயற்கை வைத்தியம் குறித்த செய்தியை படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what are the causes for stomach pain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->