ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்..மாவட்ட ஆட்சியரிடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கை!
The operators of the elevated water tank should be provided with uniform salaries request to the district collector
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற " மக்கள் குறைதீர்ப்பு " நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமையில் துணைத்தலைவர் அசுபதி, செயலாளர் விஜு , பொருளாளர் ராஜகுமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-கன்னியாகுமரி மாவட்டத்தில் தினக்கூலி , கொட்டேஷன் முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியத்தில் OHT இயக்குபவர்களை போன்று பணி நியமனம் செய்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்கவும், தினக்கூலி , கொட்டேஷன் அடிப்படையில் OHT இயக்குபவர்களுக்கும் குழுக்காப்பீடு பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் OHT இயக்குபவர்கள் என்ன வேலை செய்கின்றனரோ அதே வேலையை தான் கிராம ஊராட்சியிலும் செய்து வருகின்றோம். ஆகவே அவர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்யும்படியும், கொரோனோ கலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு செய்த ரூ.1500/ கொரோனா காலத்தில் பணியாற்றிய OHT இயக்குபவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும், பெரும்பாலான OHT இயக்குபவர்கள் ஒரே ஒரு OHT யை மட்டுமே இயக்கும் நிலைமை உள்ளது.
ஆனால் நமது மாவட்டத்தில் 5 முதல் 15 OHT மற்றும் மின்மோட்டார்கள் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து இயக்குவதால் கிடைக்க கூடிய ஊதியம் வாகனத்திற்க்கு பெட்ரோல் போடவே செலவாகிறது . ஆகவே கூடுதல் OHT மற்றும் மின்மோட்டார்கள் இயக்கும் ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பைக் அல்லது வாகனப்படி வழங்கவும், அரசாணை எண் 303 -ன் படி ஊதியம் வழங்கப்படுவதை உறுதிபடுத்துவதுடன் அரசாணை 20- யை திருத்தம் செய்து வெளியிட தமிழ்நாடு அரசிற்க்கு பரிந்துரை செய்யவும், கூடுதலாக இயக்கும் OHT -க்கு ரூ. 250 /- வழங்குவதை போன்று விசைபம்புக்கும் ரூ.250 /- வழங்க உத்தரவு பிறப்பிக்க கோரியும்,
கடந்த 20 வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள கூடுதல் தொட்டிக்கான பொறுப்புப்படி ரூ.2000/- ஆக உயர்த்தி சீருடை வழங்கவும், ஊராட்சி மன்ற தலைவர்களால் காழ்புணர்ச்சி காரணமாக பணி செய்ய விடாமல் தடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கு வெளியேற்றப்பட்ட தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூர் குறிச்சி OHT பணியாளர்கள் ஜாண் கிருஸ்டோபர் மற்றும் தோவாளை ஒன்றியம் தெள்ளாந்தி ஊராட்சி கண்ணன் ஆகிய இரண்டு பேருக்கும் பணி நியமனம் வழங்கிடவும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றித்தரக் கேட்டு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The operators of the elevated water tank should be provided with uniform salaries request to the district collector