எல்லை தாண்டிய இந்திய, பாகிஸ்தான் வீரர்கள்! பலகட்ட பேச்சுவார்த்தையின்பின் ஒப்படைப்பு!
India Pakistan Border Army solder surrender
கடந்த மாதம் 23-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, பிஎஸ்எஃப் கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்ததாக கைது செய்யப்பட்டார்.
அவர் நிழலுக்காக ஒதுங்கிய இடமே பாகிஸ்தான் எல்லை பகுதி என தெரிய வந்தது. அவர் சீருடையுடன் ரைஃபிள் ஏந்திய நிலையில் இருந்ததால் பாக். ரேஞ்சர்கள் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம், ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே நடந்தது என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தையின்பிறகு, இன்று காலை 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வாயிலாக பாகிஸ்தான், ஷாவை இந்தியா பக்கம் ஒப்படைத்தது.
பிஎஸ்எஃப் தரப்பில் தொடர்ந்த முயற்சிகள், பாக். ரேஞ்சர்களுடன் நடந்த இணக்கக் கலந்தாய்வுகள் இந்நிலையை ஏற்படுத்தியதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேவேளை, ராஜஸ்தான் எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை இந்தியா மீண்டும் பாகிஸ்தான் பக்கம் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
India Pakistan Border Army solder surrender