டாஸ்மாக் முறைகேடு விவகாரம் - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!!
today hearing tamilnadu tasmac corruption case in chennai high court
தமிழகத்தில் மதுபான நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 3 நாட்கள் வரை சோதனை நடத்தினர்.
அதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் பல முறைகேடுகள் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், மதுபான வழக்கில் ரூ. 1,000 கோடி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றம், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
English Summary
today hearing tamilnadu tasmac corruption case in chennai high court