போக்ஸோ வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்!
Chennai HC Condition bail John Jebaraj
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூடத்தின் தலைவராக செயல்பட்டு வரும் ஜான் ஜெபராஜ், கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிதும் பரிசியமானவர்.
கடந்த மே 21, 2024 அன்று கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் விருந்தொன்றை நடத்தினார். அதில் கலந்து கொண்ட 2 சிறுமிகள் மீது அவர் பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப் பதிந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெபராஜ், கேரள மாநிலம் மூணாறில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பூர்வமான நிபந்தனைகளுடன் ஜான் ஜெபராஜை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chennai HC Condition bail John Jebaraj