இடம் ஆக்கிரமிப்பு... பாதுகாப்பு வேண்டும்... சென்னை காவல் ஆணையத்தில் மனு...! - நடிகை கௌதமி - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், 80 ஸ் பிரபல நடிகை ''கவுதமி'', இன்று தனக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். அவர் தன்னுடன் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை ஆக்கிரமித்ததாக தெரிவித்து கவுதமி ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

v

மேலும், அந்த புகாரின் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.இதில் நீலாங்கரையிலுள்ள ரூ. 9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாக புகார் கொடுத்துள்ளார். தற்போது இந்த 2 வழக்குகளும் நிலுவையிலுள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு , கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவு பெயரில் அந்த கட்டுமானம் நடைபெறும் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் தன்னிடம் ரூ.96000 கேட்பதாகவும், வழக்கறிஞர் என்ற போர்வையில் வாட்ஸ் அப் மூலம் தன்னை மிரட்டுவதாக கவுதமி புகார் அளித்துள்ளார்.

மேலும், தனக்கு எதிராக நிலத்திலுள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து போஸ்டர் அனுப்பி மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.இந்தத் தகவல் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Encroachment of land want security petition to Chennai Police Commission Actress Gautami


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->