வெங்கி அட்லூரி இயக்கும் 'சூர்யா 46' படத்தில் விஜய் தேவரகொண்டாவும் இணைகிறாரா..?
Will Vijay Deverakonda also join Suriya 46
'ரெட்ரோ' வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தில் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையியில், இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டோ கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஐதராபாத்தில் நடைபெற்ற 'ரெட்ரோ' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Vijay Deverakonda also join Suriya 46