பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு..!
An official from the Pakistani embassy must leave within 24 hours Union government orders
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. பாகிஸ்தானும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்து இந்தியர்களை வெளியேற்றியது.
அத்துடன், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து, இருநாடுகளும் ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. தற்போது இந்த மோதல் நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50-இல் இருந்து 35 ஆக மத்திய அரசு குறைத்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியாவில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் தூதரக நடவடிக்கைகளுக்கு வெளியே வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியாவை விட்டு 24 மணிநேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் பெயர், தூதரகத்தில் அவர் மேற்கொள்ளும் பணி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
English Summary
An official from the Pakistani embassy must leave within 24 hours Union government orders