மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2040-இல் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் உறுதி..! - Seithipunal
Seithipunal


2040-இல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தேனியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்திரயான் 05 திட்டம், சந்திரயான் 03 போல் ஒரு லேண்டர். இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறதாகவும், இந்த திட்டம் 2040-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இஸ்ரோவின் 03-வது ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளதாகவும், இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 95 சதவீதம் இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்து விட்டதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The plan to send humans to the moon will be operational by 2040 ISRO chief confirms


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->