மாநில அந்தஸ்து கையெழுத்து இயக்கம்... முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!  - Seithipunal
Seithipunal


மாநில அந்தஸ்து கையெழுத்து இயக்கம்-முதல் கையெழுத்திட்டு முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.  

புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி வேண்டுமென உருளையன்பேட்டை தொகுதியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு  தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல கட்டங்களாக போராடி வருகின்றன. மேலும், கடந்த இரண்டு சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் சட்டமன்ற உறுப்பினர் நேரு  புதுச்சேரிக்கு மாநிலத் அந்தஸ்துக்கு பெறுவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்..

அதை முதலமைச்சர் ரங்கசாமி அரசு தீர்மானமாக மேற்கொள்வதாக கூறி அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு புதுச்சேரிக்கு தனிமாநிலத் தகுதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி கடந்த இரண்டு சட்டமன்ற கூட்டத் தொடரிலும் 15 மற்றும் 16ஆவது முறையாக ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீரமானங்கள் மத்திய அரசுக்கு முறையே அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தனி மாநிலத் தகுதி வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் மாநில அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரிக்கு தனிமாநிலத் தகுதி கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 27.06.2025 அன்று, தலைநகர் புதுடில்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாநிலத் தகுதிக்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரி, காரைக்கால் மக்களிடம் மொத்தம் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பெறுவது என்றும் அக்கையெழுத்து மனுவை டில்லி சென்று மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளோம். மேற்சொன்னவற்றை முன்னிட்டு இந்த கையெழுத்து இயக்கத்தை  சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் நரங்கசாமி அவர்கள் முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் இக்கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுநல அமைப்புத் தலைவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். தொழிலாளர்கள், மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவது என திட்டமிட்டுள்ளோம்.இந்த நிகழ்வின்போது பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The State Status Movement was inaugurated by Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->