மீண்டும் திமுக ஆட்சிதான்! பெண்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு - அமைச்சர் கே.என்.நேரு!
dmk minister kn nehru DMK Govt MK Stalin 2026 ELECTION
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் கே.என்.நேரு, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து பேசினார்.
குறிப்பாக தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், தொகுதி நிலவரம், செய்ய வேண்டிய பணிகள், மக்களின் மனநிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் பிரச்சனை எதுவும் இல்லையெனவும், அனைவரும் ஒற்றுமையாக செயல்படத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. அரசு திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பெண்கள் மத்தியில் இந்தத் திட்டங்கள் நம்பிக்கையையும் ஆதரவும் பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நேரடியாக கண்காணித்து செயல்படுத்தி வருகிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி எப்போதும் நிலைத்த கூட்டணியாக இருக்கும் என்றும், அதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
English Summary
dmk minister kn nehru DMK Govt MK Stalin 2026 ELECTION