கள்ளக்காதலி கொலை.. மேற்கு வங்க வாலிபர் கைது!
A love affair ends in murder A youth from West Bengal arrested
திருமணம் செய்ய வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஜில் பிகர் அலி தெலுங்கானா மாநிலம், சந்திராயங் குட்டாவில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.அப்போது அவருடன் அதே பகுதியை சேர்ந்த பெண் கட்டிட தொழிலாளியான கேதாவாத் புஜ்ஜி என்பவரும் வேலை செய்து வந்தார்.
அப்போது இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டு நெருக்கமாக பழகிவந்ததுடன் கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜில் பிகர் அலியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என ஜில் பிகர் அலிக் மறுப்பு தெரிவித்தார்.இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரம் அடைந்த ஜில்பிகர் அலி கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.பின்னர் அவரது உடலை படுக்கையில் போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கேதாவாத் புஜ்ஜி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜில் பிகர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
English Summary
A love affair ends in murder A youth from West Bengal arrested